Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்யாது: நீதிபதிகள்

Advertiesment
H.raja
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:23 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நீதிமன்றம் குறித்தும் காவல்துறையினர் குறைத்தும் சர்ச்சைக்குரிய  வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனால் எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர். எனவே எச்.ராஜா எந்த நேரமும் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நீதிமன்றம் குறித்து தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்த எச்.ராஜாவை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

webdunia
இந்த நிலையில் "எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் - தினகரனுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்: செல்லூர் ராஜூ கிண்டல்