Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்க பாட்டிலுக்கு 10 ரூபா வசூலிப்போம்!.. தமிழக அரசுக்கு வார்னிங் கொடுத்த கோர்ட்!...

Advertiesment
tasmac
தனியார் வசம் இருந்து மதுபான கடைகளை டாஸ்மார்க் என்கிற பெயரில் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் டாஸ்மார்க் கடைகளை திறந்தது தமிழக அரசு.. அதில் பல கோடி லாபம் அரசுக்கு கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு டாஸ்மாக் மூலம் வருகிறது. தீபாவளி, பொங்கல், புது வருடமென்றால் சில நூறு கோடிகளுக்கு மதுபான பாட்டிகள் விற்பனை ஆகிறது.

அதேநேரம், ஒருபக்கம் குடிக்கு பலரும் அடிமையாகிறார்கள். இதனால், பல குடும்பங்களில் பிரச்சனை வருகிறது.. பல பெண்கள் தாலியை இழக்கிறார்கள்.. எனவே, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என புகார்கள் வந்தாலும் பல கோடி லாபம் வருவதால் அரசுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் வரவில்லை. ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளில் விற்கும் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள் என்கிற புகார் பல வருடமாக இருக்கிறது.. ஆனாலும் அதுவும் மாறவில்லை..

அதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கிடையாது.. அதாவது டாஸ்மாக் கடைகளில் வாங்கும் பாட்டில்களை திருப்பி கொடுத்தால் வாடிக்கையாளருக்கும் 10 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் சில ஊர்களில் இது நடைமுறையில் இருக்கிறது.. ஆனால் தமிழக முழுவதும் இதை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே சொன்னது.. ஆனால் தமிழக அரசு இதுவரை செய்யவில்லை..

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மே 31ம் தேதிக்குள் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் சட்டத்தை அமல்படுத்த தவறினால் மது பாட்டிலுக்கு தலா 10 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. வாங்க பார்ப்போம்!..