Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு.. வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

Mahendran
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (12:18 IST)
'நலன் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வழக்கறிஞர் எம். சத்யகுமார் தாக்கல் செய்த இந்த மனு, திட்டத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
மனுதாரர் சத்யகுமார், தனது மனுவை திரும்பப் பெற அனுமதி கோரியுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதை நிராகரித்தது. இதே போன்ற வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
 
திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதம் செய்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் எம். சத்யகுமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை வடபழனியில் புதிய ஆகாய மேம்பாலம்.. புதிய, பழைய மெட்ரோ நிலையங்கள் இணைப்பு..!

எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையை குறைக்க முடியாது: மத்திய அரசு உறுதி..!

கண்ணை கட்டிய கவர்ச்சி! விழுந்த ஃபாலோவர்ஸ்! ரூ.40 கோடியை விழுங்கிய இன்ஸ்டா மாடல்!

தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை.. இதுக்கு பேர் வீரம் இல்லை! - அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments