தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் இரண்டாவது தடுப்பூசி போட பொது சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திய பின் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான காலம் 4 வாரத்திலிருந்து 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்பதால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த பல காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வெளிநாடு செல்பவர்கள் மட்டும் 28 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்னையில் 19 இடங்களிலும் தமிழகம் முழுவதும் 75 இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே 28 நாட்களில் தடுப்பூசி என்றும் மற்றவர்கள் 12 வாரங்கள் கழித்தே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என்றும் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.