இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran
புதன், 20 நவம்பர் 2024 (18:25 IST)
தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி ஆகிய பகுதிகளிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் அது ரெட் அலர்டாக மாற்றப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: கூகுளில் சியர்ச் செய்தால் கிடைக்கும் ஆச்சரியம்..!

20 நாட்களாக காணாமல் போன மாணவி பிணமாக மீட்பு.. ஆசிரியரே கொலை செய்தாரா?

மாணவியின் தலையில் அடித்த ஆசிரியை.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

EVM மிஷினில் கலரில் வேட்பாளர்களின் புகைப்படங்கள்.. தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments