தமிழக மீனவர்கள் இடமிருந்து பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவ்வப்போது இலங்கை படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்பதும், அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்த இலங்கை அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உடனடியாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மீனவர் சங்கங்களின் கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.