மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (16:36 IST)
வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் கனமழை குறித்து அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி தஞ்சை உள்பட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம், இரவு வேளையில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனிமூட்டம் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

பனையூரில் செங்கோட்டையனை வரவேற்ற ஆதவ்.. முதல் நாளே மன்னிப்பு கேட்டது ஏன்?

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. ஒரே நபருக்கு இத்தனை பதவிகளா? அள்ளி கொடுத்த விஜய்..!

தவெகவில் செங்கோட்டையன்!.. எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன் இவ்ளோதானா?!....

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

அடுத்த கட்டுரையில்
Show comments