தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை மற்றும் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையும், 16 மற்றும் 17 ஆகிய ஐந்து நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக 13, 16, 17 ஆகிய தினங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.