கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சதுரகிரிக்கு செல்ல இன்று, நாளையும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கமாக உள்ள நிலையில் மாதத்தில் சிவராத்திரி, அமாவாசை நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதத்தில் தினசரி பக்தர்கள் மலையேற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் ஏப்ரல் 3 முதலாக பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணிக்குள் மலைக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் மலையேற்றம் செய்தனர்.
தற்போது தென்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் சதுரகிரி மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதாலும், மழை பொழிவு மலையேற்றத்தை பாதிக்கலாம் என்பதாலும், பக்தர்கள் நலன் கருதி இன்று மற்றும் நாளை சதுரகிரி மலையேற தடை விதித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Edit by Prasanth.K