Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை - வானிலை மையம் தகவல்

நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை - வானிலை மையம் தகவல்
, வெள்ளி, 3 நவம்பர் 2017 (12:31 IST)
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 
 
அந்நிலையில், நேற்று போல் இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை நீடிக்கும் எனவும்,பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் அந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், வருகிற 8ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை, இந்த வாரம் தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு பெய்யும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நவம்பர் 8ம் தேதி வரை இயல்பை விட அதிகள் அளவு மழை பெய்யும் என வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் இந்த வாரம் இயல்பாக 4.2 செம்.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 ஜிபி ராம் ரேசர் ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே...