4 மாவட்டங்களில் வரும் வெள்ளி, சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்ககடலில் மூன்றாவது காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் வெள்ளி, சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 24 ஆம் தேதி திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நவம்பர் 25 ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நவம்பர் 26, 27ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும் என எச்சரிக்கை.