தென் இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
	
	
	வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அதன்படி, டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில், டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல், டெல்லி - சென்னை சென்ட்ரல்விரைவு ரயில், அகமதாபாத் - சென்ட்ரல் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.