சென்னையில் கனமழை பெய்ய துவங்கியது - மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (13:47 IST)
இன்று சென்னை மழை பெய்ய துவங்கும் என வானிலை மையம் கூறியது போல சென்னையில் கனமழை பெய்ய துவங்கியது. 

 
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்த காரணத்தால் சென்னையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது தலைநகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவாட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது சென்னையில் கனமழை பெய்ய துவங்கியது. கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, தி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய துவங்கியுள்ளது. சென்னையில் நாளை மறுநாள் வரை கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மையம் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments