Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று எங்கெங்கு மிக கனமழை??

இன்று எங்கெங்கு மிக கனமழை??
, புதன், 17 நவம்பர் 2021 (13:01 IST)
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்த காரணத்தால் சென்னையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது தலைநகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவாட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்று மாசுபாடுக்கு அண்டை மாநிலங்களே காரணம்! – டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு!