17 மாவட்டங்களில் கனமழை; 4 நாட்களுக்கு தொடர்மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (08:36 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், குமரி,திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகம்மூட்டமாக காணப்படும் என்றும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments