தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Siva
ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (14:58 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று  முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
 
வடமேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த 'சக்தி' தீவிரப் புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று குஜராத்தின் துவாரகாவிலிருந்து சுமார் 820 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். எனினும், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும்.
 
அக்டோபர் 5ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
அக்டோபர் 6  தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: : திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை 
 
அக்டோபர் 7: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர்
 
அக்டோபர் 8, 9  தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: : கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி .
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments