Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தனை வேடமிட்டு வந்தாலும், தமிழகம் பா.ஜ.க.வின் ஆளுகைக்கு உட்படாது!" - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்

Advertiesment
மு.க.ஸ்டாலின்

Mahendran

, வெள்ளி, 3 அக்டோபர் 2025 (14:38 IST)
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி எந்த வழியில் முயன்றாலும் தமிழ்நாடு தங்கள் கட்டுப்பாட்டில் வராது என்று  எச்சரிக்கை விடுத்தார்.
 
ராமநாதபுரத்தில் ரூ. 738 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், அது குறித்து பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டார். அதில் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை அவர் விமர்சித்தார்:
 
 "பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி போல செயல்படும் பா.ஜ.க., கரூர் நெரிசலை பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறது."
 
"மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா பலிகள் போன்றவற்றுக்கு உடனடியாக விசாரணை குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை! இது முழுக்க முழுக்க 2026 தேர்தலுக்கான அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!"
 
"எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளை சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோல் தமிழ்நாடு உங்களுடைய கட்டுப்பாட்டில் வராது."
 
மேலும், தவறு செய்தவர்கள் சரணடைய பயன்படுத்தும் 'வாஷிங் மெஷின்தான் பா.ஜ.க.' என்று அவர் மீண்டும் சாடினார். அத்தகைய கொள்கையற்ற கூட்டத்தை புறந்தள்ளி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, நாட்டுக்கே வழிகாட்டும் திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. ஆட்சி தொடர மக்கள் துணை நிற்பதை ராமநாதபுரத்தில் தான் கண்டதாக அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்கேப் ஆன ஆனந்த்.. கரூர் செல்லும் விஜய்! 20 பேர் கொண்ட குழு ஏற்பாடு!