டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் மிக கனமழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் டிசம்பர் 9, 10 ஆகிய தினங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடல் மட்டத்திலிருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் கீழடுக்கு சுழற்சி நீடிப்பதாகவும் இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது . ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.