கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

Siva
வியாழன், 6 நவம்பர் 2025 (08:02 IST)
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு விடுத்திருந்தது.
 
இந்தக் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. சிவசௌந்தரவல்லி அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.
 
கனமழை நீடிப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments