தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட 10 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தமிழகம் முழுவதும் படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.