Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Advertiesment
மாசுப்பிரமணியன்

Siva

, வெள்ளி, 31 அக்டோபர் 2025 (20:06 IST)
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால நோய்களை தடுக்க, சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
 
மழைக்காலம் தொடங்கி 15 நாட்களில், மாநிலம் முழுவதும் 16,648 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6.78 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். ஒரு தெருவில் காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக முகாம் நடத்தப்படுகிறது.
 
இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தாமதமாகவும், இணை நோய்களுடனுமே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
 
டெங்கு பரிசோதனைக்கு இந்தியாவில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. மலேரியா, டைபாய்டு போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டைவிடக் கணிசமாகக் குறைந்துள்ளது.
 
சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!