வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கான உணவுச்செலவை அடுத்த 6 மாதங்களுக்காக ஏற்றுக்கொள்வதாக ஹெச் சி எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக சுற்றுலாத் தளங்கள் திறக்கபடாத நிலையில் இப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்காக வழங்கப்படும் உணவுக்கே தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த உயிரினங்களுக்கான அடுத்த 6 மாத உணவுச் செலவை பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
சென்னை வண்டலூர் பூங்காவில் விலங்கு தத்தெடுப்பு திட்டபடி, விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.