சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே கருத்து முரண்பாடு எழுந்தது.
இதையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என ஏக மனதாக காங்கிரஸ் கட்சியினர் காணொலி காட்சி வழியே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸுகு முழு நேர தலைமைக்கு கட்சிக்குள் தேர்த நடத்த வேண்டுமெனவும், என் கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருக்க விரும்பினால் தேர்தல் நடத்தத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாககுலாம் நபி ஆசாத் உட்பட காங்கிரஸ் மூத்த தலைவரகள் 24 பேர் அதிருப்தி கடிதத்தில் கட்சியின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.