Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை கழட்டி விட்ட 8 பேர் – தப்பித்தது யார் யார்??

சென்னை கழட்டி விட்ட 8 பேர் – தப்பித்தது யார் யார்??
, புதன், 16 நவம்பர் 2022 (10:16 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எட்டு வீரர்களை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விடுவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை அறிவித்தன.

இதில் அதிகளவு வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை அணி தனது எட்டு வீரர்களை விடுவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: ஐபிஎல் ஏலம்; ஒவ்வொரு அணியிடம் எவ்வளவு தொகை இருக்கிறது?
சிஎஸ்கே அணியில் தொடரும் வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி.

 
Edited by: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஏலம்; ஒவ்வொரு அணியிடம் எவ்வளவு தொகை இருக்கிறது?