Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்ணுபிரியா மரண வழக்கில் சிபிஐ-க்கு 3 மாதம் கெடு

Advertiesment
விஷ்ணுபிரியா மரண வழக்கில் சிபிஐ-க்கு 3 மாதம் கெடு
, வெள்ளி, 1 ஜூலை 2016 (13:27 IST)
மறைந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கொலை வழக்கினை சிபிஐ காவல் துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
இந்த வழக்கில்தான், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தார். சிலரைக் கைது செய்ததுடன், தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய விசாரணை நடத்தி வந்தார்.
 
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திடீரென டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.
 
முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட இந்த வழக்கு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்குப் பிறகு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
 
கோகுல்ராஜ் கொலை மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார்.
 
பின்பு 19ஆம் தேதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்ததால், திருநெல்வேலி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
 
இதற்கிடையில், விஷ்ணுபிரியா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதானல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணையில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்ணுபிரியா கொலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், மூன்று மாதத்திற்குள் வழக்கினை முடித்து வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

192 கிலோ எடைக்கொண்ட 10 வயது சிறுவன்