இந்தோனேஷியாவில் 192 கிலோ எடைக்கொண்ட 10 வயது சிறுவன் உலகிலே அதிக எடைக்கொண்ட சிறுவனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த ஆர்ய பெர்மானா 10 வயது சிறுவன். தற்போது இந்த சிறுவனின் எடை 192 கிலோவாக உள்ளது. இவன் அடிப்படையில் விவசாய குடும்பத்தைன் சேர்ந்தவன்.
இந்த சிறுவன் தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். அரிசி மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை தினமும் சாப்பிடுகிறான். 2 பெரியவர்களின் ஒரு நாள் சாப்பாட்டை அந்த சிறுவன் உண்ணுவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்ல இயலவில்லை, ஆடை அணிய முடியவில்லை, தொடர்ந்து 2 அடி கூட நடக்க முடியவில்லை. மேலும் தினமும் 4 மணி நேரம் பெரிய தண்ணீர் தொட்டியில் குளித்து நேரத்தை கழித்து கொண்டிருக்கிறான்.