அடிப்படை பிரச்சினைகளை சொன்ன உடன் அதனை நிறைவேற்ற கூடிய எளிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனால் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என மக்கள் வாக்களித்து உள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் அடுத்த வெங்கமேட்டில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசுகையில்., இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேறி மாநிலமாக உயர்த்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.., பொங்கல் பரிசு கொடுக்க கூடாது நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக., பொங்கல் பரிசு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் 2363 கோடி நிதியை வழங்கி உள்ளார்.அடிப்படை பிரச்சினைகளை சொன்ன உடன் அதனை நிறைவேற்ற கூடிய எளிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனால் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றும் கூறினார்.