Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொய்யான செய்தி பரப்புவது திமுகவின் டி.என்.ஏவில் உள்ளது: குஷ்பு காட்டம்..!

Advertiesment
பொய்யான செய்தி பரப்புவது திமுகவின் டி.என்.ஏவில் உள்ளது: குஷ்பு காட்டம்..!

Mahendran

, புதன், 13 மார்ச் 2024 (17:14 IST)
பொய்யான செய்திகளை பரப்பும் குணம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது என குஷ்பு காட்டமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சமீபத்தில் அளித்த பேட்டியில் 1000 ரூபாய் பிச்சை போட்டால் மகளிர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா என திமுகவை கேள்வி எழுப்பிய குஷ்பு மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறுவதா என திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது உருவப்படத்தை எரித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பு 'உண்மை வெளியே வருவதற்குள்  பொய் என்பது உலகம் முழுவதும் சுற்றி விடுகிறது. உண்மையை மறைக்கவும் பொய் செய்திகளை பரப்புவதிலும் திமுக எவ்வளவு மும்முரமாக இருக்கிறது என்பதை நான் பார்த்து வருகிறேன் 
 
பொய் பரப்புவதே என்பது திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது. அமைச்சர்கள் முதல் கடைசி தொண்டர் வரை அனைவரும் திரிக்கப்பட்ட செய்தியை பரப்புவதில் தீவிரமாக உள்ளனர். திமுகவின் முக்கிய அடித்தளம் சுயமரியாதை என்று ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று பொய், பித்தலாட்டம் என்று மாறிப் போய் உள்ளது 
 
 நான் எப்போதும் பெண்களின் பக்கம் தான் இருப்பேன், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என எனக்கு திமுக கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரமடையும் ஜாபர் சாதிக் வழக்கு..! களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ..!!