Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#மக்கள்_தலைவர்_சீமான்: அண்ணனை காக்க களத்தில் குதித்த தம்பிகள்!!

Advertiesment
#மக்கள்_தலைவர்_சீமான்: அண்ணனை காக்க களத்தில் குதித்த தம்பிகள்!!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (09:05 IST)
சமுக வலைத்தளமான டிவிட்டரில் #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியல் கட்சி தொடங்க பயப்பட வேண்டும்” என பேசினார். 
 
சீமானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் விஜய் பற்றி பேசியதால் கொந்தளித்துப்போன விஜய் ரசிகர்கள் #டுபாக்கூர்சீமான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். இதற்கு போட்டியாக நாம் தமிழர் தம்பிகள் #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைப்ரஸில் பிடிப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி; இந்தியாவுக்கு நாடு கடத்தி கைது!