Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைப்ரஸில் பிடிப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி; இந்தியாவுக்கு நாடு கடத்தி கைது!

Advertiesment
சைப்ரஸில் பிடிப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி; இந்தியாவுக்கு நாடு கடத்தி கைது!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (08:50 IST)
இந்தியாவிலிருந்து தப்பி சென்ற காலிஸ்தான் தீவிரவாதி சைப்ரஸ் தீவிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சீக்கியர்களின் தனி மாநில கோரிக்கையான காலிஸ்தான் போராட்டத்திற்காக பல சதி திட்டங்களை தீட்டியவர் குர்ஜீத் சிங் நிஜ்ஜார். இவரும் இவரது கூட்டாளிகளும் தொடர்ந்து காலிஸ்தான் தனி மாநில கோரிக்கையை முன்னிருத்தி சமூக அமைதியை குலைக்கும் வகையில் பல்வேறு வீடியோக்கள், செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இவர்மீது கடந்த ஆண்டு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் குர்ஜீத் சிங் மாயமானார். அவரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை தேடி வந்த நிலையில் அவர் சைப்ரஸ் தீவிறு தப்பி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த ஐஎன்ஏ அவரை சைப்ரஸிலிருந்து நாடு கடத்த செய்துள்ளது.

அவ்வாறு நாடு கடத்தப்பட்ட குர்ஜீத் சிங் டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட நிலையில் அங்கு அவரை ஐஎன்ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறு அரைகுறையான ஆடைகளிலா? காமம் பிடித்த கண்களிலா? – கமல்ஹாசன் கேள்வி!