Publish Date: Sun, 12 Jul 2020 (16:43 IST)
Updated Date: Sun, 12 Jul 2020 (16:37 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கள்ளத்துப்பாக்கிதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சொத்து பிரச்சனை குறித்த தகராறு ஒன்றில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
தேடப்படும் எம்.எல்.ஏ இதயவர்மனின் கார், மேடவாக்கம் அருகே கண்டுபிடிப்பு என போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கள்ளத்துப்பாக்கிதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டு திமுக குறித்து அவதூறு பதிவுகள் பல போடப்பட்டு வருகின்றது.