திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது: 5 பிரிவுகளில் வழக்கு

ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:57 IST)
திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது
திருப்போரூர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சொத்து பிரச்சனை குறித்த தகராறு ஒன்றில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார்  இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். தேடப்படும் எம்.எல்.ஏ இதயவர்மனின் கார், மேடவாக்கம் அருகே கண்டுபிடிப்பு என போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்
 
முன்னதாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "வர வர ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது" - சிகிச்சை கோரும் குடும்பம்