Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்.. போக்குவரத்து மாற்றம்..!

Advertiesment
Happy

Siva

, சனி, 10 ஆகஸ்ட் 2024 (16:16 IST)
கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி சென்னை உள்பட பெரு நகரங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை சென்னை வேளச்சேரி பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளச்சேரி பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இது இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
11.08.2024, 18.08.2024 மற்றும் 25.08.2024 ஆகிய நாட்களில் அதிகாலை 02.00 மணி முதல் 10.00 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியினை நடத்த டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி ஹேப்பி ஸ்ட்ரீட்  நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
 
1. ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் ஸ்கூல் அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் ’யூ’ திருப்பம் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
 
2. விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்ட சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் ’யூ’ திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்கள் கெடு.. ஷேக் ஹசீனாவை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகல்..