Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! குறைந்தது ரயில் கட்டணம்...

Train

Senthil Velan

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (09:44 IST)
கொரோனா காலகட்டத்தில் பயணிகள் ரயில் கட்டணம் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் பழைய முறைக்கு டிக்கெட் விலை குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச கட்டணம்  10 ரூபாயாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியபோது அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரிசளித்த ரயில்வே நிர்வாகம் தற்போது அதனை மீண்டும் அமல்படுத்தி உள்ளது.


அதன்படி தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணம்10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது.  தற்போது மீண்டும் பழைய முறைக்கு டிக்கெட் குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!