Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்; இன்று முதல் ஆன்லைனில்..! – முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:51 IST)
பள்ளி பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளன.

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments