Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:23 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை பள்ளி கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்றும் டிசம்பர் 23-ஆம் தேதி முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் ஏழாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
காலாண்டு தேர்வு வினாத்தாள் தயாரித்து கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அரையாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
 
அரையாண்டுதேர்வு  முடிந்தபின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments