மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் இப்ராஹிமின் பக்காத்தான் ஹராப்பா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பின் யாகோப். இவர் கடந்த ஆண்டு ஆகஸ் 21 ஆம் தேதி மலேசியாவின் பிரதமராக இருந்த யாசின்ற்கு பதிலாக மலேசியாவில் 9 வது பிரதமராக அந்நாட்டின் அரசர் சுல்தான் அப்துல்லாவால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில், மலேசியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது.
அதில், முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹீம் கட்சி வெற்றி பெற்று புதிய பிரதமராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
இப்ராஹிமின் பக்காத்தான் ஹாரப்பா கட்சி, பெரும்பானைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவரது கட்சிக்கு சிறிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
முன்னாள் பிரதமர் யாசினின் தேசிய கூட்டணி கட்சி 73 இடங்கள் பெற்றது. பான் மலேசிய இஸ்லாமிய கட்சி 49 இடங்களில் வென்றது.
இந்த நிலையில், மலேசிய மன்னர் புதிய பிரதமராக இப்ராஹீமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.