Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீதிக்கு வரும் நேரமிது! எச்.ராஜாவின் போராட்ட முயற்சியா?

Tamilnadu
Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (20:24 IST)
இந்து மதத்தை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு எதிராக மக்கள் வீதிகளுக்கு வரவேண்டும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதத்தை விமர்சிக்கும் வகையில் பேசினார் என பலர் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். நடிகை காயத்ரி ரகுராம் அவரை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டதால் வி.சி.கவினர் பலர் காயத்ரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காயத்ரியின் ட்விட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்நிலையில் திருமா பேச்சு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ” இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல் இந்துக்களின் மதஉணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.வீதிக்கு வரும் நேரமிது” என்று கூறியுள்ளார்.

இதனால் திருமாவளவனுக்கு எதிராக எச்.ராஜா போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சிலர் கூறினாலும், அரசியல் வட்டாரங்கள் அதை மறுத்துள்ளன. மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்துள்ளார் என பேசிக் கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments