சமூக வலைதளமான டுவிட்டரில் அரசியல் பேசுவது தற்போதைய அரசியல் ட்ரெண்ட் ஆகிவிட்டது. பல அரசியல் தலைவர்களும் சரி, அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்களும் சரி டுவிட்டரை தங்கள் பிரதான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு டுவிட்டரில் அரசியல் பேசும் போது அவரை வரவேற்பதும், அதற்கு அதிரடியாக பதிலடி கொடுப்பதும் டுவிட்டர் பயனாளிகளின் வழக்கமான ஒன்று. சில சமயம் தங்களுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் கூறும் கருத்துக்கு, மிகவும் தரம் தாழ்ந்து பதிலடி கொடுக்கின்றனர் நெட்டிசன்கள். இதனால் ஆத்திரமடையும் பிரபலம் அவர்களுக்கு சில சமயம் பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று முனதினம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் லாலூ பிரசாதிற்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என பதிவிட்டார். இதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி எச்.ராஜாவை நோக்கி “நீ எப்போ மனநல மருத்துவமனைக்கு போவே” என கேள்வி எழுப்பினார்.
இதனால் கடுப்பான எச்.ராஜா அந்த நெட்டிசனுக்கு அவரது பாணியிலேயே “முதலில் உன்னை அட்மிட் பன்னுவோம்” என பதிலளித்துள்ளார்.