Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாஸ் கொடுத்த ஷாக்: ஜெயலலிதா இருந்திருந்தா அவ்ளோ தான்!

கருணாஸ் கொடுத்த ஷாக்: ஜெயலலிதா இருந்திருந்தா அவ்ளோ தான்!
, திங்கள், 8 ஜனவரி 2018 (13:51 IST)
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. டிடிவி தினகரன் முதன்முதலாக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க இருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த கூட்டத்தொடர்.
 
இதில் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது அதிர்ச்சி அளிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியளித்தனர்.
 
இன்று ஆளுநர் உரை ஆரம்பித்ததும் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து ஆளுநர் உரை தொடங்கியது.
 
இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், இரட்டை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுமான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியளித்தனர்.
 
இவர்களுக்கு வாய்ப்பளித்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்த ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்திருப்பார்களா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்கள் தற்போது திமுக உடனும், தினகரன் தரப்புடனும் நல்ல நட்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் போராட்டம் : பொங்கல் விடுமுறைக்கு செல்பவர்கள் கதி என்ன?