Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமை: ஹெச்.ராஜா

சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமை: ஹெச்.ராஜா
, புதன், 17 ஜூன் 2020 (10:25 IST)
நேற்று முன்தினம் நள்ளிரவு இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் 43 பேர் பலியானதாக கூறப்பட்டாலும் இதுகுறித்து சீனா அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீன தரப்பில் இந்தியாவைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய மக்கள் கொந்தளித்துள்ளனர். சீனாவின் முக்கிய வர்த்தக சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ளும் வகையில் சீனா எல்லையில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் கண்டனத்துக்கு உரியது என்று அரசியல் ஆர்வலர்கள், அரசீயல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சீனா பொருள்களை தவிர்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எல்லைப் பகுதியில் அத்துமீறல். கம்யூனிச சீனா அட்டூழியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லையில் ராணுவ வீரர்கள் இன்னுயிரை ஈந்து நாட்டை பாதுகாக்கின்றனர். நாம் சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் வேலைவாய்ப்புகளுக்கான அரசு இணையதளம்! – எடப்பாடியாரின் அசத்தல் ஐடியா!