Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

பொட்டு வெச்சா அழிப்பாராம்! ஆனா சர்ச்சுக்கு மட்டும் போவாராம்? – ஸ்டாலினை விமர்சிக்கும் எச்.ராஜா!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 17 அக்டோபர் 2019 (12:49 IST)
நாங்குநேரியில் தேவாலயத்தில் மு.க ஸ்டாலின் பிரார்த்தனை செய்து ஓட்டு கேட்டதாக குற்றம்சாட்டிய எச்.ராஜா, இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று அங்குள்ள மக்களிடம் ஓட்டு கேட்டதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ”சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நெற்றியில் பொட்டு வைத்தபோது உடனடியாக அதை அழித்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தினார் ஸ்டாலின்.

ஆனால் இன்று நாங்குநேரியில் கணிசமான அளவில் கிறிஸ்தவர்கள் இருப்பதால் அவர்களை கவர்வதற்காக தேவாலயம் சென்று பிரார்த்தனை செய்கிறார். இப்படியாக திராவிட முன்னேற்ற கழகம் இந்து மத விரோத தீய சக்தியாகவே செயல்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தேர்தல் நடைமுறைகளை மீறி செயல்படும் ஸ்டாலின் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

78 வயதில் எஸ் எஸ் எல் சி பாஸ் ஆன மூதாட்டி!!