Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாமீன் கிடையாது கொசுவலைதான்! ப.சிதம்பரத்தை கலாய்த்த எச்.ராஜா

Advertiesment
ஜாமீன் கிடையாது கொசுவலைதான்! ப.சிதம்பரத்தை கலாய்த்த எச்.ராஜா
, ஞாயிறு, 3 நவம்பர் 2019 (10:49 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படாததை கிண்டல் செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா.

காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்வதும், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ஜாமீன் மனு கோரியபோது ப.சிதம்பரத்திற்கு சிறையில் தங்கிய நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேண்டுமானால் செய்து தரலாம். ஆனால் ஜாமீன் தரமுடியாது என மறுத்துவிட்டார்கள்.

இதை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா “மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.” என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சீர் திருத்த திருமணத்தை கொண்டு வந்தது திமுக ’- திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு