சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா மாநில மக்கள் விரும்புவதாக சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்த போதிலும் இரு கட்சிகளுக்கும் தனியாக தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. பாஜகவிற்கு முதல்வர் பதவியும் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியும் என பேச்சுவார்த்தை முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருக்க வேண்டும் என மாநில மக்கள் விரும்புவதாக சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்து இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஆட்சி அமைப்பது குறித்து அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.