திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
சட்டப்பேரவை தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் மற்றக் கட்சிகள் அணிசேர்ந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த ஹெச் ராஜா கல்விக் கடனை ரத்துச் செய்வாராம் ஸ்டாலின். எது மத்திய அரசின் அதிகாரம் எது மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறது என்பதே தெரியாத இவர் எம்மாதிரி நிர்வாகத்தை தருவார் என்று கற்பணை செய்து பார்க்கவே முடியவில்லை. தபால் கட்டணம் குறித்தும் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று எனக் கூறியுள்ளார்.
ஆனால் அவரின் இந்த கமெண்ட்டுக்கு மாநில அரசே மாணவர்களின் கடன் தொகையை ஏற்று மத்திய அரசுக்குக் கட்டலாம். அதனைதான் ஸ்டாலின் அவ்வாறு அறிவித்துள்ளார் எனக் கூறி பதிலளித்து வருகின்றனர்.