Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை கடத்தலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை: எச்.ராஜா!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (20:27 IST)
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசு இதில் சரியாக செயல்படவில்லை என்று வெளிப்படையாக அவர் கூறினார். 
 
மேலும், தேசிய கட்சி ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார். எனவே, இவர் குறிப்பிட்ட தேசிய புள்ளி யார் என்று அனைவரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இந்த சிலை கடத்தல் பிரச்சனை குறித்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நிச்சயமாக சிலைகள் திருடியது அல்லது துணை போனது யாராக இருந்தாலும் தூக்கில் போடனும். 
 
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த தேசியக் கட்சி பிரமுகர் ஒருவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தேசியகட்சி பாஜக அல்ல. விரைவில் உண்மை வெளிவரும். இதற்கான போராட்டம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார். 
 
யாரும் ஏதும் கேட்காமல் தானக வந்து அந்த தேசிய கட்சி நாங்கள் இல்லை என கூறியதால் இதை வைத்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments