Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஒன்றும் எதேச்சதிகார ஆட்சியாளர் அல்ல: மோடி பேட்டி!

Advertiesment
நான் ஒன்றும் எதேச்சதிகார ஆட்சியாளர் அல்ல: மோடி பேட்டி!
, செவ்வாய், 3 ஜூலை 2018 (16:32 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஸ்வராஜ்யா என்னும் ஆன்லைன் இதழுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு மோடி பின்வருமாறு பதில் அளித்துள்ளார். நான் எங்கு சென்றாலும் காரின் இருக்கையிலேயே அமர்ந்திருக்க முடியாது. சாலையில், தெருக்களில் நிற்கும் மக்களைப் பார்க்க வேண்டியது இருக்கும். 
 
மக்களின் வாழ்த்துகளை பெற வேண்டியது இருக்கும். அவர்களை பார்த்து நான் பேச வேண்டியது இருக்கும். மக்களின் அன்பிலும், அரவணைப்பில் இருந்தும் விலக நான் ஒன்றும் அரசனும் இல்லை அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரும் இல்லை. 
 
நான் அப்படிப்பட்டவன் அல்ல. மக்கள்தான் எனக்கு வலிமையை கொடுத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் என்னை அமரவைத்து இருக்கிறார்கள். அவர்களிடன் இருந்து ஒதுங்கி இருக்க முடியாது என மோடி பதிலளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் நாட்டுக்கு வரும் மேகக்கூட்டங்களை திருடிவிட்டனர்; இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு