Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளர்? காங்கிரஸ் அதிரடி திட்டம்

Advertiesment
பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளர்? காங்கிரஸ் அதிரடி திட்டம்
, திங்கள், 2 ஜூலை 2018 (16:35 IST)
சமீபகாலமாக நடைபெற்று வந்த தேர்தல்களில் பாஜக இறங்குமுகமாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைத்தால் நிச்சயம் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கிவிடலாம் என அரசியல் கட்சிகள் கருதி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ராகுல்காந்தியால் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றிணைக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது என காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிரியங்கா காந்தி களமிறங்கினால், காங்கிரஸ் கூட்டணியில் சேர தயங்கும் கட்சிகள் கூட ஓகே சொல்லிவிடும் என்பதுதான் இப்போதைய காங்கிரஸ் திட்டமாக உள்ளது.
 
webdunia
இந்த திட்டத்திற்கு ராகுல்காந்தி ஓகே சொல்லிவிட்டதாகவும், அதே நேரம் சோனியா காந்தி ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியை களமிறக்கினால் நிச்சயம் காங்கிரஸ் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் என இப்பவே காங்கிரஸார் ஆரூடம் சொல்ல தொடங்கிவிட்டனர். ஆனால் மக்களின் தீர்ப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எட்டு வழிச்சாலை நல்ல திட்டம்தான் : முட்டுக்கொடுக்கும் தனியரசு(வீடியோ)