Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜடம் போல் இருந்த பாரதிராஜா: பதிலுக்கு வெளுத்து வாங்கும் எச்.ராஜா!

Advertiesment
ஜடம் போல் இருந்த பாரதிராஜா: பதிலுக்கு வெளுத்து வாங்கும் எச்.ராஜா!
, வெள்ளி, 12 ஜனவரி 2018 (11:35 IST)
ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்டபின்னரும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோவில் பாரதிராஜா எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவை வெளுத்து வாங்கியுள்ளார்.
 
இன்று பாரதிராஜா அவர்கள் எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்று அச்சம் தெரிவித்து உள்ளார். ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் .80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. அஜ்மல் கசாப்,அப்சல் குரு போன்றவர்கள் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை.
 
ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. காஷ்மீரில் பல இந்துக்கோவில் இடிக்கப்பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் விரட்ட பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. வங்கதேச அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்விக போடோ குடிமக்களை விரட்டிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை.
 
காங்கிரஸ் கட்சி மதக்கலவர தடுப்பு மசோதா கொண்டு வர முயற்சித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மிருகங்களால் கொல்லப்பட்டும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன் என எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் விளாசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!!