ரஜினிக்கு ஆலோசனை வழங்க, காங்கிரஸ் கட்சிக்கு தகுதியே கிடையாது என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான, கே.எஸ். அழகிரி, ”ரஜினிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், மேலும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே தன் ஆலோசனை எனவும், சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். அதனைத் தொடர்ந்து, இன்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பழனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆகியுள்ள ராகுல் காந்தி, ப,சிதம்பரம், ஆகியோர் தலைமையில் இயங்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு, ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதியே இல்லை எனவும், மேலும் கே.எஸ்.அழகிரி, அரசியலில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர் தான் யோசிக்க வெண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கறிஞர் என்றாலும் பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு, பாஜகவைப் பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது எனவும் ஆவேசத்தோடு கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த சர்ச்சை பேச்சால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.